வடக்கு அதிகவேக நெடுஞ்சாலைக்கான பணிகள் இன்று வெள்ளிக்கிழமை கண்டியின் செங்கடகலவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
6,750 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலையானது, 300 கிலோ மீற்றர் நீளத்தைக் கொண்டாதாக இருக்கும். நான்கு கட்டங்களாக இதன் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
முதற்கட்டமாக, என்டேரமுல்லயில் இருந்து அம்பேபுஸ்ஸ வரையிலும், இரண்டாம் கட்டமாக குருநாகல் முதல் பெலெந்தெனிய வரையிலும், மூன்றாம் கட்டமாக தம்புள்ளை வரையிலும், நான்காம் கட்டமாக தம்புள்ளையிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலும் நிர்மாணிக்கப்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இதன் பணிகள் 2018ஆம் ஆண்டளவில் நிறைவு பெறும்.

0 Responses to வடக்கு அதிவேக நெடுஞ்சாலைக்கான பணிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார்!