Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை மீன்பிடித்துறைக்கு ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்துள்ள நிபந்தனைகளை உரிய காலப்பகுதிக்குள், அதாவது ஜனவரி 15ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்வோம் என்று மீன்பிடித்துறை மற்றும் நீரியல்வள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நிபந்தனைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்ட பின்னும் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை மீன்களுக்கு தடை விதிக்குமாகவிருந்தால், நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் சதி முயற்சியாகவே இதனை கருத வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கைக்கான 300 பக்க பதிலறிக்கை வெளிவிவகார அமைச்சின் ஊடாக கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசும் போது அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இலங்கை மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுவது நிறுத்தப்பட்டிருப்பதாக ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியாகியிருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், வழமைபோலவே மீன்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இலங்கையின் மீன்பிடித்துறைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான தொழில்நுட்ப ரீதியான பிரச்சினையே இது. இதனை நுணுக்கமாக புரிந்து கொள்ளாமல் ஊடகங்கள் பிழையான செய்திகளை சித்தரிக்கின்றன. இலங்கை மீன்பிடித்துறை 08 நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக் கொண்டிருந்தது. இதில் 07 நிபந்தனைகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. வி.எம்.எஸ். இயந்திரக் கொள்வனவு மட்டுமே தற்போது பாக்கியுள்ளது. ஜனவரி 15ஆம் திகதி வரையில் எமக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் டிசம்பர் மாதத்திற்குள் நாம் அனைத்து நிபந்தனைகளையும் நிறைவு செய்வோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை உரிய காலத்துக்குள் நிறைவு செய்வோம்: ராஜித சேனாரத்ன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com