Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பதுளை ஹல்துமுல்ல மீரியபெத்தையில் இடம்பெற்ற மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடித் தேவை பாதுகாப்பான வாழ்விடங்களே என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மண்சரிவுக்குள்ளான பகுதிகளையும், பாதிக்கப்பட்ட மக்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் இன்று ஞாயிற்றுக்கிழமை சென்று பார்வையிட்டனர். அதன் பின்னர் கருத்து வெளியிடும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு உட்பட பல இடங்களிலும் இருந்து தமக்கு கிடைத்த உடனடி நிவாரணப் பொருட்கள் தமக்கு போதுமாக இருப்பதாக அந்த மக்கள் தம்மிடம் கூறியதாகவும், ஆனாலும் பாதுகாப்பான ஒரு இடத்தில் ஒரு வீடுதான் தமது பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்று அவர்கள் குறிப்பிட்டதாகவும் அவர் பி.பி.சி.யிடம் தெரிவித்துள்ளார்.

0 Responses to மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான வாழ்விடங்களே உடனடித் தேவை: சுரேஷ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com