Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவருவது தன்னுடைய பொறுப்பு என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தனது இரண்டாவது வானொலிப் பேச்சில் மோடி இதனை தெரிவித்துள்ளார். «வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் இந்திய ஏழைகளுடையது. சட்டவிரோதமாக வெளிநாடுகளில் வைப்பிலிடுவதனால் இந்தியாவுக்கு பில்லியன் டாலர்கள் கணக்கில் வருவாய் நஷ்டம் ஏற்படுகிறது. எனினும் வெளிநாடுகளில் எவ்வளவு பணம் பதுக்கிவைக்கப்பட்டுள்ளது எனும் கணக்கு எனக்குத் தெரியாது » மோடி கூறியுள்ளார்.

வாஷிங்டனைஅடிப்படையாக கொண்ட குளோபல் நிதி அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள தகவல்கள் படி சுமார் 344 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடந்த 2002-2011 காலப் பகுதியில் இந்தியாவிலிருந்து கறுப்பு பணமாக வெளியில் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தது.

0 Responses to "வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்பது எனது பொறுப்பு" : நரேந்திர மோடி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com