ஈராக்கில் ISIS உடனான போரில் ஈராக் படைக்கும் குர்துப் படைக்கும் பயிற்சி அளிப்பதற்கென மேலும் 1500 அமெரிக்கப் படை வீரர்களை அங்கு அதிபர் ஒபாமா அனுப்பியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம் அங்கு தற்போது தங்கி இருக்கும் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்து 2900 ஆக மாறியுள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் ISIS இற்கு எதிரான போருக்காக இன்னமும் $5.6 பில்லியன் டாலர் தொகையை அமெரிக்க காங்கிரஸில் கோரவிருப்பதாகவும் தற்போது ஈராக்குக்கு அனுப்பப் பட்டுள்ள அமெரிக்கத் துருப்புக்கள் பக்தாத் மற்றும் எர்பில் இற்கு வெளியேயுள்ள தளங்களில் இருந்தே ஈராக் படைகளுக்குப் பயிற்சியளிப்பதுடன் யுத்தத்தில் நேரடியாகப் பங்கேற்க மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் அமெரிக்கப் படைகள் முக்கியமாகப் பக்தாத்துக்கு வெளியே தற்போது போர் தீவிரமாக நிகழ்ந்து வரும் அன்பார் மாகாணத்திலும் டாஜி மாவட்டத்திலும் உள்ள ஆப்பரேஷன் நிலையங்களில் இருந்து செயற்படுவர் என எதிர்பார்க்கப் படுகின்றது. அன்பார் மாகாணத்தின் பல பகுதிகள் தற்போது ISIS கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஈராக் அரசின் கோரிக்கைக்கு ஏற்பாகவும் பாதுகாப்பு செயலாளர் ஹாகெல் மற்றும் ஈராக்கிலுள்ள அவது இராணுவத் தளபதிகள் ஆகியோரின் பரிந்துரைக்கு அமைவாகவுமே அமெரிக்க அதிபர் ஒபாமா இம்முடிவை எடுத்ததாக வெள்ளை மாளிகையின் அறிக்கை கூறுகின்றது. இந்நிலையில் சமீபத்தில் தான் அமெரிக்க செனட் சபைத் தேர்தல் முடிவுகள் காரணாமாக ஒபாமா இனிமேல் எடுக்கவுள்ள அரசியல் முடிவுகள் செனட் சபையின் அனுமதியைப் பெற பலத்த சவால் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ISIS உடனான போரில் ஈராக் படைக்கு உதவ மேலும் 1500 துருப்புக்களை அனுப்பினார் ஒபாமா