Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கரு ஜயசூரியவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக கரு ஜயசூரிய போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

எனினும், எதிரணியின் பொது வேட்பாளர் தொடர்பில் இறுதி தீர்மானம் ஏதும் எட்டவில்லை என்று ஜனாதிபதியிடம் தெரிவித்த கரு ஜயசூரிய, இன்னும் பல நடைமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to கரு ஜயசூரியவுக்கு மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com