Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து விலகாமல் இருப்பதற்காக 100 மில்லியன் ரூபாய்களை தர முயன்றனர் என்றும், ஆனாலும், தான் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் அரசாங்கத்திலிருந்து விலகிய நவீன் திஸாநாயக்க, நேற்று திங்கட்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் இணைந்து கொண்டார். இந்த நிலையில், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நான் அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்லாமல் இருக்க 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது. என்னைத் தேடி வந்த மூன்று பேர், மேற்படி பணத்தொகையுடன் என்னை அணுகினர். ஆனால் சட்டத்துக்கு முரணான இந்தப் பணத்தை நான் ஏற்க மறுத்து விட்டேன். மேலும் இந்தப் பணம் அரசாங்கம் சார்பிலேயே வழங்கப்பட்டது.

பணம் வழங்கியவர்களின் பெயர்களை குறிப்பாக இப்போது கூறமுடியா விட்டாலும், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியான பின்னர் அவரால் நிமிக்கப்படும் விசாரணைக் குழுவிடம் பணம் வழங்க முற்பட்டவர்களின் பெயர்களை வெளிப்படுத்துவேன். மேலும் பணம் வாங்கியவர்களின் பெயர்களும் எமக்குத் தெரியும். அதனை நாம் வெளிக்கொணர்வோம்.

சீனாவினால் வழங்கப்பட்ட நிதியுதவிகளில் பாரிய கொள்ளைகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக 96 கிலோ மீற்றர் கொண்ட தெற்கு அதிவேக வீதியை அமைப்பதற்காக சீனாவிடம் இருந்து 490 மில்லியன் டொலர் கடனாகப் பெறப்பட்டது. ஆனால், ஒரு கிலோ மீற்றர் வீதியமைப்பதற்கு குறைந்தது 2 மில்லியன் டொலர்களே செலவாகும். ஆனால் ஒரு கிலோ மீற்றருக்கு 16.49 மில்லியன் டொலர்கள் செலவானதாக அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது பாரிய கொள்ளையாகும். இந்தப் பணம் யாரால் சூறையாடப்படுகின்றது. உலக நாடுகளிடம் வாங்கும் கடன்களையெல்லாம் எமது எதிர்கால சந்ததியினரே செலுத்த வேண்டும். ஆனால் இவர்கள் கடனாக வாங்கும் பணத்தினை கொள்ளையடிக்கின்றனர்” என்றுள்ளார்.

0 Responses to 107 அரசிலிருந்து விலகாமலிருக்க 100 மில்லியன் ரூபாய்களை தர முயன்றனர்: நவீன் திஸாநாயக்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com