பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ‘நூறு நாட்களில் புதிய தேசம்’ எனும் கருப்பொருளில் தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார்.
கொழும்பு விகாரமாதேவி பூங்காவின் திறந்தவெளி அரங்கில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற நிகழ்வில் விவசாயிகள் சூழ்ந்திருக்க தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை மைத்திரிபால சிறிசேன வெளியிட்டு வைத்து உரையாற்றினர்.
1. ஜனநாயகத்தை உறுதி செய்யும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு.
2. நாட்டைக் கட்டியெழுப்பும் பொருளாதாரம்.
3. பண்பாடுள்ள சமூகம்.
4. பாதுகாப்பான உணவு மற்றும் நிரந்தர விவசாயம்.
5. அனைவருக்கும் சிறந்த சுகாதாரம்.
6. நவீன சவால்களை வெற்றிகொள்ளும் இலவசக் கல்வி.
7. நாட்டைப் பாதுகாக்கும் விதமான சர்வதேச தொடர்புகள்.
8. தொழிலின்மையை குறைக்கும் கைத்தொழில்கள் மற்றும் சேவைகள்.
9. முன்னேற்றமடைந்த அரசதுறை.
10. எரிசக்தி பராமரிப்புடன் கூடிய இலங்கை.
11. அர்த்தமுள்ள ஊடக சுதந்திரம்.
எனும் 11 முக்கிய அம்சங்களை மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் கொண்டிருக்கின்றது.
குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளிலேயே வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் அதன் பிரதிகள் வெளியிடப்பட்டிருக்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இதனிடையே, இந்த நிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருந்த தருணத்தில் மின்தடை ஏற்பட்டது. இதனால், ஒலிவாங்கிகளின்றியே மைத்திரிபால சிறிசேன தன்னுடைய உரையத் தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to ‘நூறு நாட்களில் புதிய தேசம்’ மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது!