ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்கள் எடுக்கும் தீர்மானமே இறுதித் தீர்ப்பாக அமையும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை தமிழ் மக்களுக்கு பொருத்தமாக வெளியிடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறையின் ஆலையடிவேம்பு பகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விடயங்களை நாம் கவனமாகக் கையாண்டு வருகின்றோம். தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் எதிர்காலம் தொடர்பிலேயே முடிவுகள் எடுக்கப்படும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடு திரும்பியதும் பொருத்தமான வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தல் ஆதரவு தொடர்பில் இறுதியான முடிவு வெளியிடப்படும்” என்றுள்ளார்.

0 Responses to ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களின் தீர்மானமே இறுதித் தீர்ப்பாக அமையும்: மாவை சேனாதிராஜா