கனிம வள முறைகேடுகளை விசாரித்து வரும் சகாயம் ஐ ஏ எஸ்-க்கு கொலை மிரட்டல் வந்துள்ளது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை கிரானைட் கல்குவாரிகள் முறைகேடாக செயல்பட்டு வந்தால் அவற்றைக் கண்டறிந்து விசாரித்து அறிக்கைத் தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் சகாயம் ஐஏஎஸ் தலைமையில் ஒரு குழுவை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவுப் பிறப்பித்தது. அதன்படி கடந்த ஒரு வாரமாக சகாயம் ஐஏஎஸ் தமது தலைமையில் ஒரு அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்துக் கொண்டு, மதுரை மக்களிடம் மனுக்களைப் பெற்று வருகிறார். மக்களும் மிக ஆர்வத்துடன் நேரிலும், தபால் மூலமும் மனுக்களை அளித்து அருகின்றனர்.
முறைகேடாக இயங்கி வரும் கல்குவாரிகளால் தாங்கள் எப்படியெல்லாம் துயரங்களை அனுபவித்து வருகிறோம் என்று நேரிலும், தபால் மூலமும் விளக்கமளித்து வருகின்றனர். இதுவரை 80க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் குவிந்துள்ள நிலையில், சகாயம் ஐஏஎஸ்-க்கு முன்பு ஒதுக்கப்பட்ட அறையில் ரகசிய கேமிராக்கள் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு, அவருக்கு நேற்று முன்தினம் அறை மாற்றி கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று சகாயம் ஐஏஎஸ்-க்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகி மிகவும் பரபரப்பு ஏற்படுததியுள்ளது. இருப்பினும் அவருக்கு ஏற்கனவே துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது என்பது இவ்வேளையில் குறிப்பிடத்தக்கது

0 Responses to சகாயம் ஐஏஎஸ்-க்கு மிரட்டல்?