Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக சிறையில் உள்ள சிங்கள மீனவர்கள், இலங்கை வெளியுறவுத் துறை செயலர் கேட்டுக்கொண்டபடி விடுவிக்கப்படுவார்கள் என்று, தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

தமிழக சிறையில் 30 சிங்கள மீனவர்கள் மற்றும் அவர்களது 19 படகுகளை தமிழக அரசு விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது என்றும், இலங்கை வெளியுறவுத் துறை செயலர் கேட்டுக்கொண்டபடி, தமிழக சிறையில் உள்ள சிங்கள மீனவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் வகையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது என்றும் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

இதைக் குறிப்பிட்டு பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் சிங்கள மீனவர்களை தமிழக அரசு விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவது போல, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 66 பேர் மற்றும் அவர்களது 81 படகுகளை இலங்கை அரசு விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களை இப்போதே விடுவிக்க உறுதி அளித்தால்தான்,அவர்கள் தமிழகத்தில் உள்ள தங்களது இல்லங்களுக்கு வந்து கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட முடியும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்..

0 Responses to தமிழக சிறையில் உள்ள சிங்கள மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள்: முதல்வர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com