ஜனாதிபதித் தேர்தலுக்கான மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியலமைப்பு திருத்தம் உள்ளடங்கலாக நாட்டு நலனுடன் தொடர்புள்ள பல விடயங்கள் உள்ளடக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மஹிந்த சிந்தனையின் மூன்றாவது அத்தியாயம் நிபுணர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்டு வருவதாவும், எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய பல திட்டங்கள் இதில் உள்ளடக்கப்பட இருப்பதாகவும், அதில் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான விடயங்கள் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே சுசில் பிரேமஜயந்த மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

0 Responses to தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியலமைப்பு திருத்தம் உட்பட பல்வேறு அம்சங்கள்: சுசில் பிரேமஜயந்த