நேற்று இரவு கேரளாவின் பாலக்கோடு வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் எதிர்பாராதவிதமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கேரளாவின் பாலக்கோடு அருகே உள்ள வனப்பகுதியில் நேற்று இரவு மாவோயிஸ்ட்கள் 15பேர் திடீர்த் தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். பயங்கர ஆயுதங்களைக் கொண்டு வனத்துறை அலுவலகத்தில் புகுந்து அங்கு வெறித் தனமான வகையில் தாக்குதல் நிகழ்த்தி, அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி எலக்ட்ரானிக் சாதனங்களை திருடியும் சென்றுள்ளனர். கூடவே துண்டு பிரசுரங்களையும் பறக்கவிட்டு சென்றுள்ளனர்.
அந்த துண்டுச் சீட்டுக்களில் கேரளாவில் மிகப் பெரியத் தாக்குதலை எதிர்கொள்ள அம்மாநில அரசு தயாராக இருக்க வேண்டும் என்று எழுதி இருந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகம், ஆந்திரா,கேரளா வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் ஊடுருவி உள்ளனர் என்று மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது இவ்வேளையில் குறிப்பிடத் தக்கது.

0 Responses to நேற்று இரவு கேரளாவின் பாலக்கோடு வனப்பகுதியில் மாவோயிஸ்ட் தாக்குதல்