Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எனது அடுத்த இலக்கு காங்கிரசில் மூத்தத் தலைவர்களில் ஒருவராக உள்ள ப.சிதம்பரம்தான் என்று, பாஜகவின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார்.

கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது நிதியமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் ப.சிதம்பரம். இவரிடம் ஏர்செல்,மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் சமீபத்தில்தான் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் செபி விவகாரத்தில் இவர் மீதான அனைத்து ஊழல் குற்றச்சாட்டுக்கு தம்மிடம் ஆதாரம் உள்ளது என்றும், அதை பிரதமரிடம் சமர்ப்பித்து உள்ளதாகவும் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

மேலும், தமது அடுத்த இலக்கு ப.சிதம்பரம்தான் என்பதால் அவர் மீதான குற்றச்சாட்டு உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் அனைத்து ஆதாரங்களையும் திரட்டி வருவதாவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to அடுத்த இலக்கு ப.சிதம்பரம் : ஊழல்களை வெளிக் கொண்டுவரப் போவதாக சுப்ரமணிய சுவாமி தெரிவிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com