Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்குப் பகுதியில் மக்களை எவரேனும் அச்சுறுத்தி வாக்களிக்காமல் செய்யும் பட்சத்தில் ஜனாதிபதித் தேர்தலை முழுமையாக இரத்து செய்வேன் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கிலப் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இராணுவத்தினரின் அச்சுறுத்தல்களினால் வடக்குப் பகுதி மக்கள் தேர்தலை பகிஷ்கரிக்கத் தயாராகின்றனர் என வடக்கு மாகாணத்தின் உதவி தேர்தல் ஆணையாளர்கள் எவரும் இதுவரை எனக்கு தெரியப்படுத்தவில்லை. இராணுவம் மக்கள் வாக்களிப்பை தடுக்கும் எனவும் நான் கருதவில்லை.

எனினும், வடக்கின் நிலைமை தென்பகுதியை விட வித்தியாசமானது என்பது எங்களுக்கு தெரியும். வெளிநாட்டவர்கள் தென்பகுதியில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால், வடக்கில் எனது (தேர்தல் கண்காணிப்பாளர்கள்) உத்தியோகத்தர்கள் கூட படையினரிடம் அனுமதி பெறவேண்டும். நாட்டின் ஏனைய பகுதிகளை விட அதிகளவான இராணுவ ஆட்சி வடக்கில் காணப்படுகின்றது.

வடக்கு மக்கள் வாக்களிக்க விரும்பினால், அந்த பகுதி அரசியல்வாதிகள் அவர்களை வாக்களிப்பதை தடுக்க விரும்பாவிட்டால், வேறு எவரும் மக்களை மிரட்ட முடியாது. வடக்குப் பகுதியில் மக்களை யாராவது மிரட்டி அச்சுறுத்தி வாக்களிக்க விடாமல் செய்தனர் எனத் தெரிய வந்தால், முழுத் தேர்தலையும் இரத்துச் செய்துவிடுவேன்.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கில் வாக்களிப்பதற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் தேர்தலை இரத்து செய்வேன்: மஹிந்த தேசப்பிரிய

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com