மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திலிருந்து வெளியேறிய சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மேற்கண்ட முடிவை வெளியிட்டார்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவ சபை தொடர்ச்சியாக பல சந்திப்புக்களை நடத்தி ஆராய்ந்தது. இந்த நிலையிலேயே, இன்று இறுதி முடிவை முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

0 Responses to மஹிந்த அரசிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் வெளியேற்றம்; மைத்திரிக்கு ஆதரவு!