Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தன்னுடைய கையெழுத்தை போலியாக இட்டு சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க போலி ஆவணமொன்று தயாரித்துள்ளமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்மரசிங்க பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், தனக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தமொன்று இடம்பெற்றதாகக் கூறி அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க நேற்று திங்கட்கிழமை ஆவணமொன்றை வெளியிட்டுள்ளமை தொடர்பிலேயே விசாரணை நடத்துமாறு கோரி ரணில் விக்ரமசிங்க பொலிஸ் மா அதிபருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்ட ஆவணத்தில் தனது கையொப்பம் போலியாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவ்வாறான ஒப்பந்தம் ஒன்றில் தான் கைச்சாத்திட்டிருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, போலி ஆவணம் தயாரித்து போலி கையொப்பம் இட்டமை தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு ரணில் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டுள்ளார்.


0 Responses to போலி கையெழுத்து விவகாரம்: திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக ரணில் முறைப்பாடு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com