இந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தை காணவில்லை. மாயமான விமானம் கியூ இசட் 8501 என்ற ஏர் ஏசியா நிறுவனத்துக்ககு சொந்தமானது என்றும், சுரப்யா நகரில் இருந்து சென்ற விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாயமான விமானத்தில் பயணிகள், ஊழியர்கள் என 155 பேர் பயணம் செய்துள்ளனர். விமானத்தில் பயணம் செய்த பயணிகள், ஊழியர்கள் நிலை குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை. மாயமான விமானத்தில் இந்தோனேஷியர்கள் 149 பேரும், தென்கொரியாவினர் 3 பேரும், பிரிட்டன், மலேசியா, சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் பயணம் செய்துள்ளனர்.
காலை 8.30 மணிக்கு விமானம் சிங்கப்பூரில் தரை இறங்கியிருக்க வேண்டும். விமானத்தை தேடும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக ஏர் ஏசியா தெரிவித்துள்ளது.

0 Responses to இந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் மாயம்