நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு உள்ளூர் நேரம் 8.30 மணியளவில் பெங்களூரு பிரிகேட் ரோடு அருகில் உள்ள தேவாலய நடைபாதையில் குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
IED (Improvised Explosive Device) எனப்படும் மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் சாதனமாக இக்குண்டு தயாரிக்கப்பட்டுள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பலியான பெண் தமிழகத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கார்த்திக் என்பவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும், தற்போது அவர் உடல்நிலை தேறிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இக்குண்டுவெடிப்புக்கான சூத்திரதாரிகள் யார் என்பது குறித்து தகவல் எதுவும் இன்னமும் வெளியாகவில்லை. எனினும் இக்குண்டுவெடிப்பை அடுத்து தமிழகம், கேரளாவில் நகர்ப்புறங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

0 Responses to பெங்களூரில் குண்டுவெடிப்பு : ஒருவர் பலி