Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மத்திய அரசின் சேவை மற்றும் சரக்கு வரியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழக முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் 2015 மற்றும் 16ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து விவாதிக்க மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, மாநில நிதியமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில் கலந்துக்கொள்ள தமிழக நிதியமைச்சராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் தமிழக முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் டெல்லி சென்றிருந்தார். அப்போது நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அரசின் சேவை மற்றும் சரக்கு வரிக்கு தமிழக அரசு ஒருபோதும் சம்மதம் தெரிவிக்காது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்து கடல்நீரை குடி நீராக்கும் திட்டத்துக்கு நிதியுதவி, மெட்ரோ ரயில் திட்டத்தை சைதாப்பேட்டை வரை நீட்டிக்க நிதியுதவி என்று, தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியுதவிகள் குறித்தும் அருண் ஜெட்லியிடம் வேண்டுகோள் வைத்ததாகத் தெரிகிறது.

0 Responses to மத்திய அரசின் சேவை மற்றும் சரக்கு வரியை ஏற்றுக்கொள்ள முடியாது: ஒ.பன்னீர் செல்வம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com