நெல்லையில் மதிமுக பொது செயலாளர் வைகோவும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும் சந்தித்துக் கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், மாவட்டம்தோறும் சென்று புதிதாக பாஜகவில் இணையும் உறுப்பினர்கள் சேர்க்கையைத் துவக்கி வைத்து வருகிறார். அந்த வரிசையில் இன்று தமிழிசை நெல்லையில் இருப்பதாகத் தெரிய வருகிறது. நெல்லையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொள்ள சென்றிருந்த வைகோவும், தமிழிசையும் சந்தித்து சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக பேசிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
வைகோ பாஜக கூட்டணியில் நீடிப்பாரா இல்லையா என்கிற சந்தேகம் சமீப நாட்களாக அதிகரித்து வருகிற நிலையில் இவர்களின் சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நேற்று கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதா கிருஷ்ணன், வைகோ பாஜக தலைமையிலான கூட்டணியில் நீடிப்பார் என்று உறுதியுடன் கூறியுள்ளார். சுப்ரமணிய சாமி, வைகோ கட்சியிலிருந்து விலகிவிட வேண்டும், இல்லாவிட்டால் கட்சியலிருந்து தூக்கி வீசப்படுவார் என்று கூறியிருந்த நிலையிலும், பாஜகவின் தேசியத் தலைவர் ஹெச்.ராஜா வைகோ நாவடக்கத்துடன் பேச வேண்டும், பிரதமரை அவமதித்துப் பேசினால் மேடையிலிருந்து அவர் தப்பித்து வீட்டுக்கு செல்ல முடியாது என்று எச்சரித்த நிலையிலும், வைகோ-தமிழிசை இவர்களின் சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

0 Responses to நெல்லையில் வைகோ - தமிழிசை திடீர் சந்திப்பு : வைகோவின் எதிர்காலம் பாஜகவுடன் நீடிக்குமா?