கங்கை நதியைப் போல யமுனை நதியையும் தூய்மைப்படுத்த வேண்டும் என்று மதுரா எம்பி ஹேமமாலினி கோரிக்கை வைத்துள்ளார்.
மத்திய அரசு பதவியேற்ற நிலையில், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதே போன்று மதுராவில் ஓடும் யமுனை நதியையும் தூய்மைப்படுத்த வேண்டும் என்று ஹேமமாலினி கோரிக்கை வைத்துள்ளார்.கிருஷ்ணன் பிறந்த புனித பூமியான மதுரா நகருக்கு வரும் பக்தர்கள் குளிக்க, குடிக்க யமுனை நதி நீர் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என்று ஹேமமாலினி கூறியுள்ளார்.
ஹரியானா மாநில மக்கள் கழிவுகளை யமுனை நதியில் கலக்க விடுவதால், யமுனா நதி மிகவும் அசுத்தமாக உள்ளது என்றும், இதைத் தவிர்க்க முதலில் நடவடிக்கைகள் மேற்கொண்டு, பின்னர் யமுனா நதியைத் தூய்மைப்படுத்தும் முயற்சிகளைத் துவங்க மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்று ஹேமமாலினி கோரிக்கை வைத்துள்ளார்.

0 Responses to கங்கை நதியைப் போல யமுனை நதியையும் தூய்மைப்படுத்த வேண்டும்: ஹேமமாலினி எம்பி