Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரதமர் பதவி கிடைக்கவில்லை என்பதாலேயே மைத்திரிபால சிறிசேன எதிரணிக்கு தாவினார் என்று சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று புதன்கிழமை சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. அங்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சுதந்திரக் கட்சி வரலாறு முழுவதும் சதிகள் இடம்பெற்றுள்ளன. சுதந்திரக் கட்சி 1951ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 8 வருடங்களிலே சதி ஆரம்பமானது. அதிலொரு சதி முயற்சியாகவே மைத்திரிபால எதிர்தரப்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். தனது பிரதமர் கனவு நிறைவேறாததால் அவர் மறுபக்கம் தாவினார்.

அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையிலே நாட்டின் ஜனநாயகம், பாதுகாப்பு, பொருளாதாரம் சமூக அபிவிருத்தி, கல்வி என்பன தங்கியுள்ளன. 2010இல் இது தொடர்பான பாடத்தை நாங்கள் கற்றுக் கொண்டோம். நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்கும் குழுவுக்கே நாட்டை வழங்க வேண்டும்.

அரசியலமைப்பில் பாதகமான பல பகுதிகள் இருக்கின்றன. இதனொரு பகுதியாகவே தேர்தல் முறை உள்ளது. அதனை மாற்ற எமது அரசு நடவடிக்கை எடுத்தது. அரசாங்கத்திலுள்ள இடதுசாரி கட்சிகள் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க கோருகின்றன. சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடும் அதுவே. ஆனால் எதிர்த்தரப்புகள் தேர்தலுக்காகவே பல்வேறு உறுதிகளை வழங்குகின்றன. தேர்தல் விஞ்ஞாபனத்தில் யாப்பு திருத்தம் தொடர்பான விடயங்களை உள்ளடக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என்றுள்ளார்.

0 Responses to பிரதமர் பதவி கிடைக்கவில்லை என்பதாலேயே மைத்திரிபால சிறிசேன எதிரணிக்கு தாவினார்: டலஸ் அழகப்பெரும

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com