2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் திகதி பாலியல் பலாத்காரத்தில் உயிரிழந்த நிர்பயாவுக்கு நீதி கிடைக்க பிரதமர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று,நிர்பயாவின் தந்தை கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் திகதி டெல்லியில் ஓடும் பேருந்தில் பிசியோதெரபி மாணவி ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.இவரது பெயரை நிர்பயா என்று பெயரிட்டு ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டு வந்தன.இந்நிலையில் நிர்பயா பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான மூன்றாம் ஆண்டின் நினைவு தினமான இன்று நிர்பயாவின் தந்தை பிரதமருக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
அந்த கோரிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி, அச்சமின்றி முடிவுகள் எடுக்கக் கூடியவர் என்றும், நிர்பயாவின் வழக்கில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை நிறைவேற்றி நிர்பயாவுக்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் நிர்பயா சம்பவம் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகள் முடிந்தும், பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப் படாமல்தான் இருக்கிறது என்றும் நிர்பயாவின் தந்தை வேதனை தெரிவித்துள்ளார். நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் மூவருக்கு தூக்கு தண்டனையையும், ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டதால் அவருக்கு தண்டனை இல்லை என்றும், ஒருவன் மைனர் என்பதால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது இவ்வேளையில் குறிப்பிடத்தக்கது.

0 Responses to பிரதமர் நரேந்திர மோடி நிர்பயாவுக்கு விரைந்து நீதி கிடைக்க செய்ய வேண்டும்: தந்தை