Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து விலகி எதிரணிக்கு செல்வதைத் தடுப்பதற்காக தனக்கு 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் தர முயன்றதாக முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ள குற்றச்சாட்டு குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி முறைப்பாடு செய்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நவீன் திஸாநாயக்கவின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துமாறு எமது கட்சி சார்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தனக்கு பணம் தர முயன்றது யார் என நவீன் திசாநாயக்க சாட்சியமளிக்க வேண்டும். சாட்சியை மறைப்பது தவறு. இது குறித்து சட்டம் ஒழுங்கு அமைச்சு விசாரணை நடத்துகிறது. இலஞ்சம் பெறுவது மட்டுமன்றி கொடுப்பதும் தவறு.

ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை தனக்கு இலஞ்சம் வழங்க முயன்றவர்களை வெளியிட போவதில்லை என நவீன் திசாநாயக்க கூறியுள்ளார். ஆனால் அவ்வாறு அவரால் செய்ய முடியாது. சார்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் சாட்சியமளிக்க அழைத்தால் அவர் அது குறித்து தகவல் வழங்க கட்டுப்பட்டுள்ளார்.

அரச தரப்பு அமைச்சர் ஒருவருக்கு இலஞ்சம் தர முயன்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் எதிர்தரப்பினருக்கு சார்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் முறையிட முடியும்” என்றுள்ளார்.

0 Responses to நவீன் திஸாநாயக்கவின் குற்றச்சாட்டுகள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு: கெஹலிய ரம்புக்வெல

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com