Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சகோதரிகள் இருவருக்கு அறிவித்த வீரதீர செயல்களுக்கான விருதை ஹரியானா அரசு நிறுத்தி வைத்துள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஹரியானா அரசு பேருந்தில் சகோதரிகள் இருவர் ஈவ் டீசிங் செய்த மூன்று இளைஞர்களை அடித்துத் துவைத்த காணொளி வெளியானது. மேலும், அந்த இளைஞர்களை சகோதரிகள் அடிக்கும்போது சகோதரிகளுக்கு பயணிகள் எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை என்று புகாரும் கூறப்பட்டது. வீடியோவில் பதிவான காட்சிகளை வைத்து ஹரியானா காவல்துறை மூன்று இளைஞர்களைக் கைது செய்து சிறையிலும் அடைத்தது.

இதற்கிடையில் சகோதரிகள் இருவரும் வேறு ஒரு இளைஞரை அடித்து துவைக்கும் காணொளி பரவியது. பின்னர் சகோதரிகள் இருவருக்கும் இதேதான் வேலை என்றும், இதுபோன்ற இன்னும் சில காணொளிகளும் சகோதரிகளின் மொபைலில் உள்ளன என்றும் தகவல் வெளியாகின. இந்நிலையில் பேருந்தில் நடந்த சம்பவத்தின் போது பயணித்த ஒரு பயணி இளைஞர்கள் சகோதரிகளிடம் எதுவும் சில்மிஷம் செய்யவில்லை என்றும், இருக்கை பிரச்சனை காரணமாக சகோதரிகள் அவர்களை அடித்துத் துவைத்தனர் என்றும் கூறியுள்ளார். மேலும், இரு சகோதரிகளையும் தனித் தனியாக விசாரித்ததில், இருவரும் வேறு வேறு விவரங்களைக் கூற போலீசாருக்கு இவர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டு உள்ளதாகத் தெரிய வருகிறது.

இந்நிலையில்தான் ஹரியானா அரசு சகோதரிகள் இருவருக்கும் அறிவித்த வீர தீர செயல்களுக்கான விருதை நிறுத்தி வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.முன்பாக முதல் நாள் பேருந்து சம்பவத்தை அடுத்து,ஹரியானா அரசு சகோதரிகள் இருவருக்கும் குடியரசு தினத்தன்று வீர தீர செயலக்ளுக்கான விருதை வழங்க அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to சகோதரிகள் இருவருக்கு அறிவித்த வீரதீர செயல்களுக்கான விருது நிறுத்தி வைப்பு:ஹரியானா அரசு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com