Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தன்னுடைய பாதுகாப்பை அகற்றிவிட்டு அரசாங்கம் தன்னைக் கொலை செய்ய முயற்சிப்பதாக பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கல்கமுவையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதி வேட்பாளர் என்ற வகையில் எனக்கான பாதுகாப்பிற்கு 7 பாதுகாப்பாளர்கள் வழங்கப்பட்டுள்ளனர். ஆனால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எந்தளவு பாதுகாப்பு உள்ளது என்பதை மக்கள் அறிந்துள்ளனர். எனினும், மக்களின் ஆதரவு பாதுகாப்பும் எனக்கிருப்பதால் நான் எவ்வித அச்சமும் கொள்ளவில்லை.

மக்கள் பாதுகாப்பே எனக்குள்ளது என்ற மன நிறைவோடு நாட்டினதும் மக்களினதும் நலனுக்காக தேர்தலில் இறங்கியுள்ளேன். பயத்துடனும் அச்சத்துடனும் வாழ்வதை விட நாட்டிற்கும் மக்களுக்கும் சேவையாற்றும் பொருட்டு ஊழல் மோசடிகளுக்கு எதிராக மக்களின் ஜனநாயக சுதந்திரத்திற்காகவும் சத்தியத்திற்காகவும் போராடி வீரனாக மடிவதே மேல் என்ற இலட்சியத்தை கொண்டே உங்கள் மத்தியில் வந்துள்ளேன்” என்றார்.

0 Responses to என்னைக் கொலை செய்ய முயற்சி: மைத்திரிபால சிறிசேன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com