Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ சார்பில் நேற்று திங்கட்கிழமை தேர்தல் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்றுக் காலை 10.45 அளவில் கட்டுப்பணம் செலுத்தியதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம். மொஹமட் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரை ஐவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே, ஜனசெத்த முன்னணி சார்பில் வண. பத்தரமுல்ல சீலரத்ன தேரர், ஒக்கொம வெசியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு சார்பில் எம்.பி. பெமினிமுல்ல, சோசலிச சமத்துவக் கட்சி சார்பில் பானி விஜேய சிரிவர்தன, ஐக்கிய சோசலிசக் கட்சி சார்பில் சிரிதுங்க ஜெயசூரிய ஆகியோர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

0 Responses to ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக மஹிந்த ராஜபக்ஷ கட்டுப்பணம் செலுத்தினார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com