Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகவும் வெற்றிபெற்று அவரது ஜனாதிபதி பதவிக் காலம் முடிவடைய முன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை இந்நாட்டு அரசியலிலிருந்து ஒழிக்கப்படும் என்று இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பின் இந்த நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் இருக்க மாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

மாத்தறையின் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்று கோஷமிடுபவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கே முயற்சி செய்கின்றனர்.

ஜனாதிபதிக்குள்ள ஒரேயொரு பாதுகாப்பு நிறைவேற்று ஜனாதிபதி முறையாகும். இதனை ஒழித்தால் ஜனாதிபதியை இலகுவில் யுத்த நீதிமன்றத்தில் ஆஜர் செய்யலாம் என்று அல்ஜஸிரா ரூபவாஹினிச் சேவை அறிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் நீலம், பச்சை, சிவப்பு கொடிகள் ஒன்று சேர்ந்துள்ளன. இந்நிறக் கொடிகளால் எமக்கு பிரயோசனமில்லை. நாட்டிற்குத் தேவை தேசியக் கொடியாகும். அதனை எமக்குப் பாதுகாத்துக் கொடுத்தவர் நமது ஜனாதிபதியே. நாட்டின் பல பகுதிகளிலும் அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வளமான நாடாக எமது நாடு திகழ்கிறது” என்றுள்ளார்.

0 Responses to மஹிந்த ராஜபக்ஷவின் மூன்றாம் தவணைக் காலத்தில் நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படும்: டலஸ் அழகப்பெரும

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com