யாழ் மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணிக்கு ஆரம்பித்த யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மோதல் நிலைமை ஏற்பட்டது.
கூட்டத்தில் பங்கெடுத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) பிரதிநிதிகளுக்கும் இடையில் கூட்டம் ஆரம்பித்த கணம் தொடக்கம் வாய்த்தர்க்கம் இடம்பெற்று வந்தது.
ஒரு கட்டத்தில் அது மோதலாக மாறியது. இந்த மோதலினால் வடக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் காயமடைந்தார்.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் பிரத்தியேக செயலாளரும், சகோதரருமான தயானந்தா வீசியெறிந்த தண்ணீப் போத்தல் பொ.ஐங்கரநேசனின் முகத்தை தாக்கியது. இதனாலேயே, அவர் காயமடைந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த மோதல் நிலைமையை அடுத்து, ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

0 Responses to யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மோதல்; பொ.ஐங்கரநேசன் காயமடைந்தார்! (வீடியோ இணைப்பு)