Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தன்னுடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட காரணத்தினாலேயே வெளிநாடொன்றில் கடந்த வாரம் முழுவதும் தங்கியிருந்ததாக மேல் மாகாண சபை உறுப்பினரும், அண்மையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகி பொது எதிரணிக்கு ஆதரவை வழங்கியவருமான ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கப்போவதாக தான் அறிவித்த பின்னர் தனக்கு மரண அச்சுறுத்தல்கள் வந்ததாகவும், அதனை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்கான தன்னை வெளிநாடு செல்லுமாறு மைத்திரிபால சிறிசேனவும், ராஜித சேனாரத்னவும் அறுவுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் இலங்கைக்கு திருப்பியுள்ள அவர், அச்சுறுத்தல்களுக்கான இனி பயப்படப் போவதில்லை என்றும் தொடர்ந்து வரும் நாட்களில் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக உழைக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.

0 Responses to பாதுகாப்பு அச்சுறுத்தலினாலேயே வெளிநாடு சென்றேன்: ஹிருணிக்கா பிரேமச்சந்திர

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com