Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் ஆராயும் சந்திப்பொன்று இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கு இடையே கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றது. ஆனாலும், இறுதி முடிவுகள் ஏதுவும் எடுக்கப்படவில்லை.

குறித்த சந்திப்பில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நீண்டநேரமாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது இரு வேட்பாளர்களிடமிருந்தும் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய பாதகமான விடயங்கள் தொடர்பாக கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகளால் எடுத்துக் கூறப்பட்டது.

அத்துடன் ஆட்சி மாற்றத்தின் அவசியம் குறித்தும், எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்கள் சம்பந்தமாக எதுவுமே குறிப்பிடப்படாத விடயம் பற்றியும், தமிழ் மக்களது பிரச்சினைகள் சம்பந்தமாகவும் நீண்டநேரமாக கலந்துரையாடப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவை அதன் தலைவர் இரா.சம்பந்தன் ஓரிரு தினங்களுக்குள் பத்திரிகை மாநாடு ஊடாக அறிவிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

0 Responses to சம்பந்தன் தலைமையில் த.தே.கூ கூடியது. ஆனாலும், இறுதி முடிவு இல்லை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com