Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பெங்களூரு குண்டு வெடிப்பில் உயிரிழந்த தமிழ் பெண்ணின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சித்தாராமையா அறிவித்துள்ளார்.

 நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சரியாக 8.30 மணிக்கு பெங்களூருவின் பிரிகேட் சாலை அருகில் உள்ள தேவாலய நடைப்பாதையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைப்பெற்றது. இந்த குண்டுவெடிப்பில் தமிழகத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் பலியாகியுள்ளார். இந்த இளம்பெண்ணின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சித்தாராமையா தெரிவித்துள்ளார்.

இன்னும் 3 நாட்களில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைப்பெற உள்ள நிலையில் அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்துள்ளது அம்மாநில அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் தீவிர வாத அமைப்பான செமிக்கு தொடர்பிருக்கலாம் என்று சந்தேகம் நிலவி வருகிறது.

இதுக்குறித்து மாநில அரசு ஆலோசனை நடத்தி வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், மற்றும் ராணுவ பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

0 Responses to பெங்களூரு குண்டு வெடிப்பில் உயிரிழந்த தமிழ் பெண்ணின் குடும்பத்துக்கு ஐந்து லட்சம் நிதியுதவி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com