ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவளிக்கவுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொட்டகலையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளமாவது, “மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவிக்கும்படி சிலர் என்னிடம் கேட்டுக்கொண்ட போதும் அந்த வேண்டுக்கோளை நான் நிராகரித்து விட்டேன். இந்த (மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான) அரசாங்கம் மலையகத்துக்கு பல அபிவிருத்திகளை செய்து கொடுத்துள்ளது.
மலையகத்தில் ஆசிரியர் நியமனத்தை பெற்றுக்கொடுக்க அதிமேகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். தோட்ட தொழிலாளர்களின் காணி பிரச்சினைகளையும் தீர்த்துவைப்பதுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் மலையகத்தை சேர்ந்த சில அரசியல்வாதிகளுக்கு, ஜனாதிபதி தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் வெற்றி பெற்று காட்டுமாறு நான் சவால் விடுக்கிறேன். அவ்வாறு இல்லையென்றால் அதற்கு நான் ஒரு பதிலை 09ஆம் திகதி தெரிவிக்கிறேன்.
மலையகத்தின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் அனைவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க முடிவு எடுத்துள்ளார்கள்” என்றுள்ளார்.

0 Responses to மைத்திரிக்கு ஆதரவு என்ற செய்திகளில் உண்மையில்லை; மஹிந்தவுக்கே ஆதரவு: இ.தொ.கா