இந்திய அகதி முகாம்களிலுள்ள இலங்கையர்களுக்குப் பிறந்த 16,000 பிள்ளைகள் பிரஜாவுரிமைகள் இல்லாத நிலையில் அகதிகள் அந்தஸ்துடன் வாழ்ந்து வருகின்றன. இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்ப வேண்டுமென இலங்கை இந்திய அதிகாரிகள் கலந்துரையாடிவரும் நிலையில் இது விடயம் தொடர்பில் செயற்பாட்டாளர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.
அகதி முகாம்களில் பிறக்கும் குழந்தைகள் குறித்து பிரதி உயர்ஸ்தானிகராலயத்தில் பதிவுசெய்யவேண்டும். பிறந்த ஒரு வருடத்துக்குள் பதிவு செய்வதன் ஊடாக பிறப்புச் சான்றிதழைப் பெற வேண்டும். கடந்த மூன்று தசாப்தங்களில் தமிழகத்தில் உள்ள பல்வேறு முகாம்களில் 24,000ற்கும் அதிகமான குழந்தைகள் பிறந்துள்ளன. இவற்றில் 8,000 குழந்தைகள் மாத்திரமே பதிவுசெய்யப்பட்டிருப்பதாக ஈழஅகதிகள் புனர்வாழ்வு அமைப்பின் நிறுவுனர் எஸ்.சி.சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.
16,000 பிள்ளைகள் பதிவுசெய்யப்படவேண்டி உள்ளது. இவர்களில் பலர் இளைஞர்களாகிவிட்டனர். அவர்கள் நாடு திரும்பினாலும் அது சட்ட ரீதியானதாக அமையாது. எனவே அவர்களின் பதிவுகளை இந்திய அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அகதி முகாம்களில் பிறக்கும் குழந்தைகளைப் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தில் பதிவுசெய்யும் நடவடிக்கை சுமுகமாக நடைபெற்றது. அப்போதிருந்த உயர்ஸ்தானிகர் மக்களிடம் சென்று பதிவுகளை நடத்தினார். இந்த நிலையில் சந்திரிகா காலத்தில் கடைப் பிடிக்கப்பட்ட கொள்கையை மீண்டும் கடைப்பிடிப்பதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.
2012ஆம் ஆண்டு ஈழஅகதிகள் புனர்வாழ்வு அமைப்பு பதிவுகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும், ஈழஆதரவு குழுக்களால் இந்த முயற்சி இடைநிறுத்தப்பட்டிருந்தது. இந்தியாவிலுள்ள அகதிகளை நாட்டுக்கு அழைப்பதற்கு முன்னர் அவர்களைப் பதிவுசெய்வது தொடர்பில் தெளிவான நிலைப்பாடொன்றை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to இந்திய அகதி முகாம்களிலுள்ள இலங்கைப் பிள்ளைகள் 16,000 பேருக்கு பிரஜாவுரிமை இல்லை: எஸ்.சி. சந்திரஹாசன்