Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு- செலவுத் திட்டம் 163 மேலதிக வாக்குகளினால் பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

இடைக்கால வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக, 164 வாக்குகளும், எதிராக 01 வாக்கும் பதிவாகியிருந்தது. 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் நடுநிலையாக வாக்களித்திருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) உள்ளிட்ட கட்சிகள் வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அஜித் குமார வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, டியூ குணசேகர, கீதாஞ்சன குணவர்தன, வீரக்குமார திஸாநாயக்க, வை.ஜீ. பத்மசிறி, சிறியானி விஜயவிக்ரம, சந்திரசிறி கஜதீர, திஸ்ஸ வித்தாரண ஆகியோர் நடுநிலை வகித்திருந்தனர்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) வாக்கெடுப்பில் கலந்து கொண்டிருக்கவில்லை. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதி இடைக்கால வரவு- செலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்தார். இதன் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் 5 ஆம் திகதி ஆரம்பமானது. இறுதிநாள் விவாதம் நேற்று நடைபெற்றது.

0 Responses to மைத்திரி அரசின் இடைக்கால வரவு- செலவுத் திட்டம் 163 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com