Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் இறுதி மோதல் காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கையை ஆறு மாத காலத்துக்கு ஒத்திவைப்பதற்கு ஐக்கிய நாடுகளின் உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹூசைன் பரிந்துரையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்த ஒத்திவைப்பானது ஒரு முறை மாத்திரமே நிகழக்கூடியதென்றும் விசாரணை அறிக்கை செப்டம்பர் மாதம் 2015ஆம் ஆண்டில் வெளியிடப்படும் என்றும் ஐக்கிய நாடுகளின் உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மாறி வரும் நிலைமைகளில் இந்த அறிக்கையை பலப்படுத்தும் வகையில் மேலும் ஆதாரங்கள் கிடைக்கலாம். முன்னைய அரசாங்கத்தைப் போலல்லாது இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமைகள் குறித்த பல விசயங்களில் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ள நிலையில், அவர்களது கடப்பாடுகளை யதார்த்தமாக்க தனக்கு இது உதவும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் முன்னைய மனித உரிமை ஆணையாளரான நவநீதம்பிள்ளை அவர்களுக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட மூன்று நிபுணர்களும் இந்த கால நீடிப்பு அவசியமானது என்று தனக்கு கூறியுள்ளதாகவும் சையத் அல் ஹூசைன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களும், சாட்சியம் வழங்கியவர்களும், இந்த காலநீடிப்பு இதனை நீர்த்துப்போகச் செய்யும் விசயமாக எண்ணி அச்சம் கொள்ளலாம் என்ற யதார்தத்தை தான் ஏற்பதாக கூறியுள்ள அவர், ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கான பலமான குரலாக தாம் ஒலிப்போம் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

0 Responses to இலங்கை மீதான ஐ.நா. விசாரணை அறிக்கை; 6 மாதங்களுக்கு ஒத்திவைப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com