இலங்கையின் 67ஆவது சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் மீது எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு தீர்மானிக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவை உடனடியாக கூட்ட வேண்டும் என்றும் இலங்கையின் சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்டு தமிழ் மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தையும் குற்றத்தையும் புரிந்த இரா.சம்பந்தன் மீது எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கும் பொறுப்பும், கடமையும் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கே உரியதால் இதனை உடனடியாக கூட்டவேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இனியும் ஒரு சிலர் மட்டுமே எமது மக்களின் தலைவிதி பற்றி தீர்மானிக்கும் பரிதாப நிலையை நாம் அனுமதிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to சம்பந்தன் மீது தமிழரசுக் கட்சி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்