Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை சுங்க திணைக்களத்தினால், தடுத்து வைக்கப்பட்டிருந்த புரொண்ட்லைன் (Frontline) சஞ்சிகை பிரதிகளை விடுவிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

புரொண்டலைன் சஞ்சிகையை தடுத்து வைக்கும் சுங்கத் திணைக்களம் தீர்மானம் நல்லாட்சியின் ஒரு பகுதியான ஊடக சுதந்திரம் தொடர்பான கொள்கைக்கு முரணானது என்பதால், அவற்றை விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

புரொண்ட்லைன் சஞ்சிகை தனது புதிய வெளியீட்டில், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 1987 ஆம் ஆண்டு வழங்கிய பேட்டி மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து முன்னதாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்த ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க.

புரொண்ட்லைன் சஞ்சிகையின் புதிய பதிப்பில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பேட்டி மீண்டும் வெளியிடப்பட்டிருந்ததால், அதனை சுங்கத் திணைக்களம் தடுத்து வைத்துள்ளதாக கூறினார்.

சஞ்சிகையின் பிரதிகளை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் ஊடகத்துறை அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சுங்க அதிகாரி பரணவிதான நேற்று தெரிவித்திருந்தார்.

புரொண்ட்லைன் சஞ்சிகை, இந்தியாவில் வெளியாகும் இந்து பத்திரிகையின் ஒரு வெளியீடு என்பது குறிப்பிடத்தக்கது.


0 Responses to தலைவர் பிரபாகரனின் பேட்டி அடங்கிய புரொண்ட்லைன் சஞ்சிகையை விடுவிக்குமாறு ரணில் உத்தரவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com