பிரதம நீதியரசர் எதிர்வரும் காலத்தில் அரசியலமைப்பு சபையின் ஊடாகவே நியமிக்கப்படுவார் என்று அரசாங்கத்தின் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜிதன சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் பிரதம நீதியரசரை ஜனாதிபதியே நியமித்து வந்தார். ஆனாலும், ஜனாதிபதியும் அரசியல்வாதியே. எனவேதான் பிரதம நீதியரசரை அரசியலமைப்பு சபையினூடாக நியமிப்பதற்கான அரசியல் மறுசீரமைப்பொன்றைச் செய்யவிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
பிரதம நீதியரசராகவிருந்த மொஹான் பீரிஸ் நீக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. மாறாக அவருக்கு எதிரான விசாரணையொன்றை மேற்கொள்வதற்கு தெரிவுக்குழுவை அமைப்பது தொடர்பான பிரேரணையே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதனால், அவரை மீள நியமிப்பதை நாம் விரும்பவில்லை. சிரேஷ்ட உச்சநீதிமன்ற நீதியரசர் ஒருவரை நியமிக்க முடிவுசெய்தோம். இனிவரும் காலங்களில் பிரதம நீதியரசரை அரசியலமைப்பு சபையே நியமிக்கும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to அரசியலமைப்பு சபையே இனிமேல் பிரதம நீதியரசரை நியமிக்கும்: ராஜித சேனாரத்ன