Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தவிர்ந்த சில கட்சிகளினால் நுகேகொடவில் நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட கூட்டம் வெற்றிலையின் பலத்தைப் பிரதிபலித்திருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை முன்னிறுத்தப் கோரும் நுகேகொட கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மக்களுக்கு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதில், பெருந்தொகை மக்கள் கலந்து கொண்டமை கூட்டம் வெற்றியளித்துள்ளதாகக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரான சுசில் பிரேமஜயந்த தனது பொறுப்புக்களை கொழும்பிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை ஏற்றார். அப்போது, ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to நுகேகொட கூட்டம் வெற்றிலையின் பலத்தை பிரதிபலித்திருக்கிறது: சுசில் பிரேமஜயந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com