Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சட்டப்பேரவையை விட்டு தேமுதிக எம் எல் ஏவை வெளியேற்றலாமேத் தவிர மக்கள் மனதிலிருந்து வெளியேற்ற முடியாது என்று, தேமுதிக நிர்வாகி விஜயகாந்த் கூறியுள்ளார்.

நேற்று தேமுதிக உறுப்பினர்களின் சட்டபேரவைக் குழுத் தலைவர் மோகன் ராஜ், சர்ச்சைக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தேமுதிக மற்றும் அதிமுக எம் எல் ஏக்கள் ரகளையில் ஈடுபட்டனர்.எனவே, தேமுதிக உறுப்பினர்கள் நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கலந்துக்கொள்ள தடை விதிக்கப்பட்டது.

இதுக்குறித்து கருத்துத் தெரிவித்துள்ள விஜயகாந்த்,தேமுதிக-அதிமுக ஆகிய இரு தரப்பு எம் எல் ஏக்களும் மோதிக்கொண்டனர் என்றாலும், தேமுதிக எம் எல் ஏக்களுக்கு மட்டுமே இந்த தண்டனை.அதோடு மோகன் ராஜ் மீது உரிமை மீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதும் கண்டனத்துக்கு உரியது என்று கூறியுள்ளார் விஜயகாந்த். மேலும்,மக்கள் மனதிலிருந்து தேமுதிக எம் எல் ஏக்களை யாராலும் நீக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to மக்கள் மனதிலிருந்து தேமுதிக எம்எல்ஏக்களை வெளியேற்ற முடியாது: விஜயகாந்த்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com