இலங்கை ஜனாதிபதியின் இந்திய வருகை, அந்நாட்டு தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு வரும் நிலையில், இலங்கை ஜனாதிபதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போக்கு தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு நல்லதல்ல.
இலங்கை தமிழர் விவகாரத்தில் நிரந்தர தீர்வு ஏற்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும், தமிழக பாஜகவும் உறுதியாக உள்ளது.
இலங்கை தமிழர் பிரச்சினை நிரந்தர தீர்வுக்கு வரும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையை இலங்கை ஜனாதிபதியின் வருகை ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்கும் வகையில் விரைவில் மாற்றம் ஏற்படும் என தமிழிசை நம்பிக்கை வெளியிட்டார்.

0 Responses to மைதிரியின் வருகையை எதிர்ப்பது தமிழர்களுக்கு நல்லதல்ல: தமிழிசை சவுந்தரராஜன்