Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான உப செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் எதிர்வரும் சனிக்கிழமை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளையும், அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்களையும் சந்திப்பதற்கு அவர் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு முதற்தடவையாக விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜெப்ரி பெல்ட்மன், பரஸ்பர முக்கியத்துவமுள்ள பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கைத் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்கான உப செயலாளர் நாயகம் இலங்கை வருகிறார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com