Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களின் போது கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் நினைவுத்தூபியை முள்ளிவாய்க்காலில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை உள்ளூராட்சி மன்றங்களின் சட்டப்பிரகாரம் முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண சபை ஆலோசனை வழங்கியுள்ளது.

வடக்கு மாகாண சபையின் 25வது அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பித்தது. சபை அமர்வுகள் ஆரம்பித்ததும் உறுப்பினர்களின் வாய்மொழி கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது.

கடந்த வருடம் ஜனவரி மாதம் 27ஆம் திகதி மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனினால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட, முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவுத்தூபி அமைப்பது சம்பந்தமான தீர்மானத்தின் அடுத்த கட்டம் என்ன என்று வினவப்பட்டது.

அதற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதிலளிக்கையில், “முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை கட்டுவதில் வடக்கு மாகாண சபை எந்தவொரு தடையையும் செய்யவில்லை. அதனை உரிய முறையில் உள்ளூராட்சி அமைச்சு ஊடாக ஒப்பந்ததாரர்கள் விண்ணப்பித்து கட்டலாம். கடந்த கால அரசாங்கம் இதற்கு தடையாக இருந்தாலும், தற்போது புதிய அரசாங்கம் மாறியுள்ள நிலையில் தூபியை அமைக்க முனையலாம்.” என்றுள்ளார்.

இந்த நிலையில், உள்ளூராட்சி மன்றங்களின் சட்டப்பிரகாரம் வடக்கு மாகாண உள்ளூராட்சி சபைக்கு, உரியவர்கள் விண்ணப்பத்தை கையளித்து நினைவுத்தூபியை அமைக்கலாம் என அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

0 Responses to முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை உள்ளூராட்சி சட்டங்களின் பிரகாரம் அமைக்க வடக்கு மாகாண சபை ஆலோசனை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com