மகாராஷ்டிர பாஜக அரசுடன் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்று சிவசேனா அறிவித்துள்ளது.
கடந்த இரு நாட்களுக்கு முன்னர் சிவசேனா தமது அதிகாரப்பூர்வ நாளேட்டில் மகாராஷ்டிராவை ஆளும் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான பாஜக அரசு, மகாராஷ்டிர விவசாயிகளின் தற்கொலைக் குறித்துக் கண்டுக்கொள்ளவில்லை என்று தெரிவித்திருந்தது. மேலும், வர்த்தகத்தில் கவனம் செலுத்தி வரும் மகாராஷ்டிர அரசு, விவசாயிகளின் நலன் குறித்து எந்தவிதத் திட்டமும் அறிவிக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தது. இதனால் பாஜக-சிவசேனா இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவியது.
இதையடுத்து ஆளும் மகாராஷ்டிர பாஜக அரசு, அரசின் குறைகளை நேரடியாக சுட்டிக்காண்பித்து பேச வேண்டும். மாறாக தங்களுக்கு சொந்தமான பத்திரிகைகளில் இதுப்போன்ற அறிக்கைகளை வெளிய்டுவது கூடாது என்று தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய சிவசேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே, சிவசேனா-பஜகவுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்று கூறியுள்ளார்.

0 Responses to பாஜகவுடன் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை:சிவசேனா