தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஸா தேசாய் பிஸ்வால் இன்று திங்கட்கிழமை அதிகாலை இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இரண்டு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிஸ்வால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிபால, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
அத்தோடு, நிஸா தேசாய் பிஸ்வால் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்யவுள்ளார்.
இதேவேளை, பொது நலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். கமலேஷ் சர்மா நேற்று முன்தினம் சனிக்கிழமை நாட்டிற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 Responses to அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஸா தேசாய் பிஸ்வால் இலங்கை வந்தார்