Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவுக்கான விஜயத்தினை இம்மாத இறுதியில் மேற்கொள்ளவுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வரவேற்பதற்கு ஆவலாக உள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மும்மொழிகளில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று புதன்கிழமை ருவிட்டரினூடு வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார். அதிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'இலங்கை மக்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். வரலாறு, கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையிலான நமது உறவு பிரிக்க இயலாத ஒன்றாகும். இலங்கையின் வளமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள். இம்மாதத்தின் பிற்பகுதியில் இந்தியா வரவுள்ள ஜனாதிபதி சிறிசேனா அவர்களை வரவேற்க ஆவலாக உள்ளேன்' என்றுள்ளார்.


0 Responses to மைத்திரிபால சிறிசேனவை வரவேற்க ஆவலாக உள்ளேன்: நரேந்திர மோடி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com