Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக விரும்புவது அவரது தனிப்பட்ட முடிவினைப் பொறுத்தது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் அடுத்த பொதுத்தேர்தலில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் தாம் (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி) போட்டியிடுவோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராவார். அதனடிப்படையில் சுதந்திரக் கட்சியை அதிகாரத்துக்கு கொண்டுவருவதற்காக அவர் செயற்படுவார் என்று சுசில் பிரேமஜயந்த நம்பிக்கை வெளியிட்டார்.

அடுத்த பாராளுமன்ற தேர்தலில், தான் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தீர்மானிக்க வேண்டும். அவ்வாறான கோரிக்கையொன்று முன்வைக்கப்படுமாயின் அதுதொடர்பில் ஆராயப்படும் என்று கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறியுள்ளார்.

அத்தோடு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளில் நான்கு கட்சிகள் நாளை 18ஆம் திகதி புதன்கிழமை நுகேகொடையில் நடத்தவிருக்கின்ற கூட்டம் தனிப்பட்ட இலாப நோக்கம் கொண்டது என்று தெரிவித்த சுசில் பிரேமஜயந்த, அக்கூட்டத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to மஹிந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா என்பது அவரின் முடிவைப் பொறுத்தது: சுசில் பிரேமஜயந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com