Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாஜகவில் புதிய உறுப்பினர்களை எப்படி கவர்ச்சிகரமானத் திட்டங்கள் மூலம் இழுப்பது என்பதுக் குறித்த ஆலோசனை இன்று டெல்லியில் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது.

 பாஜக அடுத்து தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலைக் குறிவைத்துக் காய்களை நகர்த்தி வருவதால், பாஜக உறுப்பினர்கள் சேர்க்கை ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் முக்கிய நபராக இடம்பெற்றிருந்தார்.மேலும் அவர் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜகவுக்கு பதிய உறுப்பினர்களை சேர்த்து வருகிறார்.

இதற்கிடையில் மேலும் பல கவர்சிகரமானத் திட்டங்கள் , அறிவுப்பூர்வமான யுக்திகளைக் கையாண்டு எப்படி உறுப்பினர்களை சேர்ப்பது என்பதுக் குறித்து நேற்று மாலை வரை ஆலோசனை நடைப்பெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மார்ச் மாதம் 5ம் திகதி தமிழகம் வந்து கட்சி நிர்வாகிகளை சந்திக்க உள்ளார் என்றும் தெரிய வருகிறது

0 Responses to பாஜகவில் உறுப்பினர்கள் சேர்ப்பதுக் குறித்து மும்முர ஆலோசனை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com